உளப்பகுப்பாய்வு

நவீன அறிவியல் தூண்களில் ஒன்றான உளப்பகுப்பாய்வு அகப் போராட்டங்களைத் தணிக்கிறது. இதன் வழியாகப் புறப் போராட்டங்கள் சமாதானமாகின்றன . ஃப்ராய்ட் உருவாகிய உளப்பகுப்பாய்வு மனித நேயத்தை வளர்க்கிறது. வாருங்கள் மனித நேயம் வளர்ப்போம்...

என் மொழி



கடமை செய்யத் தவறியாவனுக்காக வீண்வேலைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஊதியத்துக்கு ஏற்ப உழைகாதவன் பணம் வீண் செலவுகளாகிவிடும். உழைப்புக்கு மீறிய பணம் நேர்மைக்குப் பயன்படாது.



மௌனம் மிகவும் வலிமையானது என்று ஒவ்வொரு வாக்கியமும் தெளிவுபடுத்துகிறது.. சொற்களுக்கு இடை வெளியில்..



 உடலைக் கடந்தவனுக்கு உடல் நோய் இல்லை. மனத்தைக் கடந்தவனுக்கு மன நோய் இல்லை. ஆன்மாவைக் கடந்தவனுக்குப் பிறவி நோய் இல்லை. இம்மூன்றும் கடந்தவனுக்குக் கலக்கம் இல்லை. அதற்கு தியானம் ஒன்றே வழி.


நல்லதுக்கு அலைபவன் நல்லவிதமாக அனுபவிப்பான்
கெட்டதுக்கு அலைபவன் கேட்டவிதமாக அனுபவிப்பான்..




தம்மைப்போல் மனிதனைப் படைத்தான் இறைவன்  என்கிறது மதம். தம்மைப்போல் கடவுளைப் படைத்தான் என்கிறது ஆராய்ச்சி. இருவரும் ஒன்றல்ல என்கிறது அனுபவம்.




தோல்வியை நாடிச் செல்லாதே.. உன்னை நாடி வெற்றி வராது.





நீ விரும்பும் அவள்/ன் உனக்குக் காதலர் ஆகி விட்டால் நீ கொடுத்து வைத்தவன்/ள். அப்படி ஆக‌வில்லை என்றால் அவள்/ன் கொடுத்து வைக்கவில்லை என்று அர்த்தம்.


யாரையோ பார்ப்பது போலத்தான் கண்ணாடியை நாம் என்றைக்கும்  பார்க்கிறோம். ஆனால் நாம் எப்படிப் பார்கின்றோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைப் பார்க்கும்.



எந்தவிதத்தில் நாம் தொடர்ந்து அதிகமாகத் துன்பப்படுகின்றோமோ அது தொடர்புடைய பாவங்களை நாம் செய்திருக்கிறோம் என்று பொருள்.



எண்ணங்கள் தாம்  வாழ்கையை எழுதுகின்றன. அது கவிதையா காவியமா  நாவலா வரலாறா சிரிப்புத் துணுக்கா அல்லது வெறும் கிறுக்கல்களா என்பது நம் எண்ணம் பொருத்து உள்ளது. குறைந்த பட்சம் இலக்கணப் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.


அண்டம் அளவு பரந்து விரிந்தது அறிவு. ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து முடித்ததும் நாம் முட்டாள் என்று உணர்வதுதான் உண்மையான அறிவு வளர்ச்சி..



பாராட்டில் கொஞ்சம் பொறாமை பொதிந்திருக்கும்  இருக்கும்.  பொறாமையில் பெருமளவு பாராட்டு மறைந்திருக்கும்.  ஒரு பொறாமை பல பாராட்டுக்கு இணையானது.


No comments:

Post a Comment